தொடர்கிறது... ( பாகம் 2 )
ஆனால் தம்முடைய ஜனங்களை இப்படி ஒப்புக்கொடுத்து அழித்து விடுவது தேவனுடைய சித்தம் அல்ல... தம்முடைய ஜனங்களை சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த விரும்பினார்.
அதற்காக இரண்டுவித நியாயத் தீர்ப்புகளை திருச்சபைக்குள் அனுப்பப் போகிறதாக ஆண்டவர் வெளிப்படுத்தினர்.
அந்த நியாயத்தீர்ப்பு, "பட்டயம், பஞ்சம், கொள்ளை நோய், துஷ்ட மிருகம்" என்ற நான்கு கோணங்களில் இருக்கும் என்றார். வரப்போகிற இந்த ஆபத்தை சபைகளில் எச்சரிக்கும்படியாக அநேக இடங்களுக்கும் என்னை அனுப்பினார்.
சில இடங்களில் கண்டும் காணாமல் இருந்தார்கள். அனேக இடங்களில் என்னை திரும்ப அழைக்கவே இல்லை. பல இடங்களில் இந்த வார்த்தைகளை எதிர்த்தார்கள். அநேகர் எழும்பி என்னை நிந்திக்கவும், தூஷிக்கவும், "ஆண்டவர் இப்படி எல்லாம் நியாயந்தீர்க்கமாட்டார் அவர் அன்புள்ளவர்" என்று என்னை கேலி கிண்டல் செய்யவும் தொடங்கினார்கள்.
கர்த்தருடைய வார்த்தைகள் ஒன்றாகிலும் கீழே விழுவது இல்லை என்பதை எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறார்கள். ஆம், அவர் சொன்னபடியே முதல் நியாயத்தீர்ப்பு கடந்து வந்தது. ஆனால் அந்த நியாயத் தீர்ப்பு தொடங்குவதற்கு முன்பதாக என்னை ஆலய ஆராதனையை ஆரம்பிக்கச் சொன்னார். அந்த நியாயத் தீர்ப்பின் நிமித்தம் முழு உலகத்தில் உள்ள சபைகள் அடைக்கப்படும் என்றார் ஆனால் இந்த ஆலய ஆராதனையோ எப்பொழுதும் திறந்திருக்கும், எந்த விதத்திலும் தடைபடாது என்றார்.
முதல்விசை கொரோனா என்ற கொள்ளை நோய் வந்தபோது இந்த வார்த்தைகள் எல்லாம் நிறைவேறினது.
உலக நாடுகளில் உள்ள எல்லா திருச்சபைகளும் அடைக்கப்பட்டன. அனேக ஊழியர்களும் விசுவாசிகளும் இதில் மரித்தார்கள். யோனாவின் நிமித்தம் மற்றவர்களுக்கும் பாதிப்பு வந்தது போல திருச்சபை நிமித்தம் உலகத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு வந்தது. அநேகர் இதை, "மனிதனுடைய தவறுகளினால் ஏற்பட்ட ஆபத்துகள்" என்று அறியாமையினாலே பிதற்றினார்கள். சிலர் இதை பிசாசினுடைய தந்திரம் என்று சொன்னாகள். பலர் இதெல்லாம் கார்ப்பரேட்டுகளுடைய தந்திரம் என்று கூறினார்கள். ஆனால் இந்த கருத்துக்கள் எல்லாம் ஜனங்கள் தங்கள் தேவனுக்கு நேராக உண்மையாக மனம் திரும்பாதபடிக்கு அவர்கள் இருதயத்தை கடினப்படுத்தவும், தவறாக திசைதிருப்புவதற்காக உதவினதே தவிர வேறொன்றுமில்லை. ஆகவே "பழைய குருடி கதவைத் திறடி" என்ற பழமொழிக்கேற்ப கிறிஸ்தவர்கள் இன்று பழைய வழியில்... சொல்லப்போனால் இன்னும் அதிகமாக கர்த்தருக்கு விரோதமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையில் இந்த முதல் நியாயத் தீர்ப்பு நடப்பதற்கு முன்பதாக தேவன் சென்னையிலிருந்து என் சொந்த ஊருக்கு என்னைத் திரும்பச் செய்திருந்தார்.
ஆண்டவராகிய இயேசு, தன்னை நேசிக்கிற, தனக்காக வைராக்கியம் உள்ள, தன்னுடைய சாயலைப் பெற்ற ஒரு இளம் சந்ததியை தனக்கென்று ஆயத்தப்படுத்தும் படியாக எனக்கு கட்டளையிட்டார்.
மீதமுள்ளது தொடரும்...
Comments