![](https://static.wixstatic.com/media/fe17a4_ebb21a1ba5ae40e08f6bf874a9152d12~mv2.png/v1/fill/w_500,h_500,al_c,q_85,enc_auto/fe17a4_ebb21a1ba5ae40e08f6bf874a9152d12~mv2.png)
ஏன் இப்படி நடக்கிறது? எதினால் இந்தியா இப்படி மாறிவிட்டது? யார் இதற்குக் காரணம்? தேவன் ஏன் இந்தியாவை இப்படி ஒப்புக்கொடுக்க வேண்டும்? இதைச் சரிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? என்று பல கேள்விகள் நம் முன் வரலாம்.
ஆண்டவருடைய மிகுந்த கிருபையினால் கடைசிக் காலங்களில் நடைபெறுகிற இந்தக் காரியங்களை அறியவும்... அதைக் குறித்து சாட்சி கொடுக்கவும்... எல்லோரையும் கர்த்தரின் நாமத்தினால் எச்சரிக்கவும்... காரியங்களைச் சீர்படுத்தும்படி செயல்படவும்... என் தாயின் கருவிலே நான் உண்டாக்கப்படுவதற்கு முன்னே தேவன் என்னைத் தெரிந்து கொண்டார்.
2010 ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் மூன்று நாட்கள் நான் தேவனுடைய ஊழியத்தை செய்து கொண்டிருந்தபோது, கர்த்தர் வெளிப்படுத்தினார், "பிஜேபி என்ற கட்சி இந்தியாவை ஆளுகை செய்யும்" என்று... அதை அந்தக் கூட்டத்தில் என்னை அறிவிக்கவும் வைத்தார்.
2011 ல் நான் செய்து கொண்டிருந்த ஊழியத்தையும் வியாபாரத்தையும் விட்டுவிட்டு... அப்பொழுது கட்டி இருந்த புதிதான வீட்டையும் விட்டுவிட்டு... இயேசுவோடு கூட இருக்கும்படி சென்னைக்கு என்னை அனுப்பினார்.
அப்படி சென்னையில் இருந்த நாட்களில், "இனி வரப்போகிற ஆட்சி அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கு அடையாளமாய் இருக்கும்" என்று வெளிப்படுத்தினார்.
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி ஒரு மிருகத்தின் ஆட்சி என்பதையும் இங்கு நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். (அதை நீங்கள் முற்றிலும் அறிய வேண்டும் என்று விரும்பினால்...(?) மற்றொரு சமயம் இதையும் கர்த்தருடைய ஆவியினால் சொல்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கிறேன்.)
ஆண்டவர், "ஏன் தேசத்தை இப்படியொரு ஆட்சியின் கையில் ஒப்புக்கொடுக்கிறார்" என்ற காரணத்தையும் வெளிப்படுத்தினார்.
"இன்றைக்கு இருக்கிற திருச்சபைகளும், ஊழியர்களும் மற்றும் விசுவாசிகள் என்று சொல்லப்படுகிற கிறிஸ்தவர்களே இதற்குக் காரணம்" என்றும் கூறினார்.
இன்றைக்கு இருக்கிற திருச்சபைகள் மற்றும் ஊழியங்களின் தலைவர்களையும், விசுவாசிகளையும் ஆண்டவர் நம்பி இருந்ததாகவும் ஆனால் இவர்கள் அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் தேவன் வேதனைப்பட்டார்.
"தேசங்களைச் சுதந்தரிக்கிற வார்த்தைகளையும் வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் என் ஜனங்களுக்குக் கொடுத்தேன். ஆனால் அவர்களோ என் சித்தத்தை நிறைவேற்றாமல் என்னை மகிமைப்படுத்தாமல், தங்களை மேன்மைப்படுத்தவும் தாங்கள் செழிப்பாக இருக்கவும் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்" என்று துக்கத்தோடு பேசினார்.
"இதைக் குறித்து திருச்சபைகளைத் தலைவர்களைத் தேவன் எச்சரித்ததாகவும், ஆனால் அவருடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு யாரும் செவி கொடுக்கவில்லை" என்றும் கூறினார்.
"எச்சரிக்க வேண்டிய தலைவர்கள், ஊழியர்கள் தேவனை பிரியப்படுத்த மனதில்லாமல்... விசுவாசிகளைப் பிரியப்படுத்த மனதாகி... தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து ஜனங்களைப் பிரியப்படுத்தும்படி... உங்களுக்குச் சமாதானம்… உங்களுக்கு ஆசீர்வாதம் என்று தேவன் சொல்லாததை சொன்னார்கள்" என்றார்.
இப்படி இவர்கள் தேவனை புறக்கணித்ததின் நிமித்தம் இன்றைக்கு இருக்கிற திருச்சபைகளுக்குள்ளும் ஊழியங்களுக்குள்ளும் கிறிஸ்துவ குடும்பங்களுக்குள்ளும் உலகத்தின் வேஷம் அசுத்தம் அருவருப்பு மற்றும் பிசாசின் சகலவித வஞ்சனையான போதகங்கள் காணப்பட தேவன் ஒப்புக்கொடுத்தார்.
ஆகவே திருச்சபைகளுக்குள் பக்தியின் வேஷம் இருக்கும் ஆனால் பரிசுத்த தேவ பயம் இருக்காது. உலகத்தின் ஆடம்பரம் இச்சை அருவருப்பு காணப்படும் ஆனால் பரிசுத்த அலங்காரமும், ஆவியின் கனியாகிய தேவனுடைய திவ்ய சுபாவங்களும் காணப்படாது. ஏராளமான ஊழியங்களும் ஆராதனைகளும் நடைபெறும் ஆனால் இரட்சிக்கப்பட வேண்டிய தேசங்களோ நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகும். காரணம் ரோமர் 1ன் படி தேவன் திருச்சபையை இப்படிப்பட்ட சாபத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
இதோடு மாத்திரமல்லாமல் மிருகத்தின் ஆட்சிக்கு அடையாளமான இந்த ஆட்சியைத் தேசத்திலே வரவைத்து தமது ஜனங்களை அடிமைத்தனத்திற்கும், கிறிஸ்துவ ஜனத்தின் நிமித்தம் தேசத்தை நிந்தனைக்கும் ஒப்புக் கொடுத்ததாகத் தேவன் கூறினார்....
கீழ்ப்படியாமல் தேவனுடைய பிரசன்னத்தை விட்டு விலகின யோனா நிமித்தம் கடலில் கொந்தளிப்பும் கப்பலில் பிரயாணம் செய்த பயணிகளுக்கும் அதன் உடைமைகளுக்கும் பெருத்த சேதம் உண்டானது போலக் கீழ்படியாத தேவனுடைய ஜனத்தின் நிமித்தம் உலகத்தில் கொந்தளிப்பும் அழிவும் வந்தது.
ஆவியானவர் சொல்கிறதை காது உள்ளவன் கேட்கட்டும்....
மீதமுள்ளது தொடரும்...
Comentários